அவசரம் முன்னே சென்றால்..நிழல்போல
தாமதம் எப்போதும் பின் தொடரும்
அவசரமாக சாப்பிட்டதெல்லாம்
தாமதமாக செரிக்கிறது...
அவசரமாக ஆத்திரம் வருகிறது...அதன்விளைவை
தாமதமாக உணரமுடிகிறது..
அவசரமாக அறியாதநட்பு கிடைக்கிறது..அதன்பின்
தாமதமாக ஆபத்தும் தொடருகிறது..
அவசரமாகப் படித்ததெல்லாம்
தாமதமாக நினைவுக்கு வருகிறது..
அவசரமாக வாய்விட்ட அபத்த வார்த்தையை
தாமதமாக மனம் திரும்ப அழைக்க நினைக்கிறது..
அவசரமாக எடுத்த முடிவை
தாமதமாக தப்பென்று உணருகிறோம்..
அவசரமாகக் எங்கோ கிளம்பும்போது
தாமதமாக உணர்கிறோம் தவறவிட்டது எதையோ..
அவசரமாக கோபக்கனல் கொண்டெழுதும் கடிதத்தில்..
தாமதமாக அறிகிறோம் தவறான வார்த்தையை இருகிறதென்பதை..
அவசரமாகச் செய்ய நினைத்தை...சற்றுநேரம் யோசித்து..
தாமதமாகச் செய்யப் பழகவேண்டும்..பிழையில்லாமல்..
ஆக....ஒவ்வொரு செயலிலும்
முயலைப்போல அவசரமும் வேண்டாம்..
ஆமையைப்போல தாமதமும் வேண்டாம்..
"முயலாமை" என்றைக்குமே வேண்டாம்...
"நிதானம்" ஒன்றே மிக அவசியம்.