Thursday 26 January 2017

அக்னி ஏவுகணை சோதனையை தள்ளிப் போட முடியுமா?



அதிகாலை 3 மணிக்கு கலாமுக்கு போனைப் போட்ட டி.என்.சேஷன்!
டெல்லி: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அதிகாலையில் போன் செய்து, அமெரிக்காக்காரன் கடுமையாக நெருக்குகிறான். நாம் அக்னி ஏவுகணை பரிசோதனையைத் தள்ளிப் போட முடியுமா என்று கேட்டாராம் டி.என். சேஷன். அடுத்த சில மணி நேரங்களில் அக்னி ஏவுகணை ஏவப்பட இருந்த நிலையில் இப்படிக் கேட்டுள்ளது மத்திய அரசு. அக்னி ஏவுகணையின் பிதாமகரான அப்துல் கலாம் தான் சந்தித்த பல்வேறு சவால்களை தனது கடைசி நூலான "Advantage India: From Challenge to Opportunity" என்ற புத்தககத்தில் விவரித்துள்ளார் கலாம். அதில்தான் அக்னி ஏவுகணை 1989ம் ஆண்டு பரிசோதிக்கப்படவிருந்த நிலையில் கடைசி நேரத்தில் மத்திய அரசு அதை நிறுத்த முடியுமா என்று தன்னிடம் கேட்டதாக கூறியுள்ளார் கலாம். இதுகுறித்து கலாம் தனது நூலில் கூறியுள்ளதாவது... ராஜீவ் காந்தி காலத்தில் 1989ம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தார். அமைச்சரவைச் செயலாளராக டி.என்.சேஷன் இருந்தார். அக்னி ஏவுகணையை ஏவிப் பரிசோதிக்கும் திட்டம் இறுதிக் கட்டத்தில் இருந்தது. அதிகாலையில் எழுப்பிய டி.என்.சேஷன் இந்த நிலையில் அக்னி ஏவப்பட சில மணி நேரங்களே இருந்த நிலையில் அதிகாலை 3 மணிக்கு எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர் டி. என்.சேஷன். அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வியே, எந்த நிலையில் இருக்கிறது அக்னி என்றுதான். ஜி.கே.வாசனுக்கு நாளை பிறந்த நாள்... த.மா.கா சார்பில் ரத்த தான முகாம் ஜெயலலிதா ஆவி சசிகலாவை பழிவாங்குமா? பீதி கிளப்பும் ஜோதிடர்கள் முதியவரை அசிங்கமாக திட்டி தரதரவென இழுத்து சென்ற போலீஸ்காரர்! மதுரை விவசாயிகள் போராட்டத்தில் பரபரப்பு Featured Posts பயங்கர பிரஷர் இதைக் கேட்டு என்ன பதில் சொல்வது என்று நான் யோசித்தேன். ஆனால் அவரோ எனது பதிலைக் கூட எதிர்பாராமல், அமெரிக்கா மற்றும் நேட்டோவிடமிருந்து கடும் நெருக்குதல் வருகிறது. அக்னியை ஏவுவதை தள்ளிப் போடுமாறு நெருக்குதல் தருகிறார்கள். தூதரக ரீதியாக நெருக்குகிறார்கள். இப்போது அக்னி எந்த நிலையில் இருக்கிறது கலாம் என்று கேட்டார். பல மைல் தூரம் ஓடிய மனது அவர் கேட்டுக் கொண்டிருந்த அந்த சில விநாடிகளில் எனது மனது சந்திப்பூர் வரை ஓடி விட்டது. நம்மை உளவு பார்க்க அமெரிக்கா தனது செயற்கைக் கோள்களை திருப்பி வைத்து வந்தது நமக்குத் தெரியும். பிரதமரை அமெரிக்கா கடுமையாக நெருக்கி வருவதையும் நான் அறிந்திருந்தேன். சந்திப்பூரிலும் நிலைமை சரியில்லை இது ஒருபக்கம் இருக்க அக்னி ஏவிப் பரிசோதிக்கப்படவிருந்த சந்திப்பூரிலும் வானிலை சரியில்லை. சற்று மோசமாகவே இருந்தது. அடுத்த சில நாட்களுக்கு இது நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஜி.கே.வாசனுக்கு நாளை பிறந்த நாள்... த.மா.கா சார்பில் ரத்த தான முகாம் ஜெயலலிதா ஆவி சசிகலாவை பழிவாங்குமா? பீதி கிளப்பும் ஜோதிடர்கள் முதியவரை அசிங்கமாக திட்டி தரதரவென இழுத்து சென்ற போலீஸ்காரர்! மதுரை விவசாயிகள் போராட்டத்தில் பரபரப்பு Featured Posts இளம் படையினர் அக்னி சோதனைக்காக என்னுடன் பெரிய இளைஞர் பட்டாளமே பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தது. வெளிநாடுகளின் தடை, தடங்கல்கள், முட்டுக்கட்டைகள் என அனைத்தையும் பார்த்தவர்கள் அவர்கள். அதையும் மீறி அக்னி சோதனை நடக்கவிருப்பது அவர்களை உற்சாகத்தில் வைத்திருந்தது. கூட்டிக் கழித்துப் பார்த்து சேஷன் பேசிக் கொண்டிருந்தபோது எனது மனதில் இதெல்லாம் ஓடியது. கணக்குப் போட்டுப் பார்த்தேன். பின்னர் சேஷனிடம், சார், ஏவுகணை இறுதிக் கட்டத்தில் நிற்கிறது. அதைத் திரும்பப் பெற முடியாது. சோதனையை நிறுத்த முடியாது. மிகவும் தாமதமாக வந்து விட்டீர்கள் என்றேன். ஓகே இதற்கு சேஷன் பல கேள்விகளை சரமாரியாக கேட்பார், பிரதமர் பேசக் கூடும் என்றெல்லாம் நான் நினைத்தேன். ஆனால் எனக்கு வியப்பளிக்கும் வகையில், ஓகே என்று கூறிய சேஷன். சில விநாடி தாமதத்திற்குப் பின்னர் கோ அஹெட் என்று கூறி போனை வைத்தார். சாதனை படைத்த அக்னி அவர் போனை வைத்த அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது 1989ம் ஆண்டு, மே 22ம் தேதி அக்னி ஏவுகணை ஏவப்பட்டது. எந்தத் தவறும் இல்லாமல் அந்த சோதனை முழுமையாக முடிந்தது. நாம் வரலாறு படைத்தோம். நம்மால் முடியும் என்பதை அந்த இளம் விஞ்ஞானிகள் படை உணர்ந்தது. புயல் வந்து புரட்டிப் போட்டது அடுத்த நாள் சந்திப்பூரை புயல் தாக்கியது. நமது தளத்தையும் அது பாதி சேதப்படுத்தியது. ஆனால் நாம்தான் அக்னியால் வென்று விட்டோமே என்று கூறியுள்ளார் கலாம்.

No comments:

Post a Comment