பனிக்காலத்தில் சருமம் வறட்சி அடைவதற்கான சில காரணங்கள் சிலரது சருமம் வறட்சியடைந்து, மென்மைத்தன்மை நீங்கி, சொரசொரப்பாக, சுருக்கங்களுடன், செதில் செதிலாக காணப்படுவதை பார்த்திருப்போம். அதிலும் இந்த நிலை பனிக்காலத்தில் மிகவும் மோசமாக இருக்கும்.
இத்தகைய வறட்சியைப் பொக்குவதற்கு பலர் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், கிரீம்களை பூசிக்கொள்ளலாம். சரும வறட்சிக்கு புறக்காரணிகள் காரணமாக இருந்தாலும், சிலருக்கு பரம்பரைக் காரணங்களாலும் சரும வறட்சி ஏற்படுகிறது.
இத்தகைய வறட்சியடைந்த சருமத்தை உடனுக்குடன் சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையெனில், பல பாக்டீரியாக்கள் வறண்ட சருமத்தின் வழியே ஊடுருவி சரும அழற்சியை ஏற்படுத்தும்.
சரும வறட்சி பெரும்பாலும் உலர்ந்த காற்றினால் முக்கியமாக ஏசி அறைகளில் மணிக்கணக்கில் அமர்ந்திருந்தால் சருமம் வறட்சியடையும். மேலும் சரும வறட்சியானது மிகக்குறைந்த வெப்பநிலை, மிகக்குறைந்த ஈரப்பதம் மற்றும் பயங்கரமாக அல்லது மிக வேகமாக அடிக்கும் காற்று போன்றவற்றாலும் ஏற்படும்.

அதிகநேரம் வெந்நீரில் சருமத்தை நனைப்பதாலும், சருமம் வறட்சியடைந்து விடுகிறது. பொதுவாக சருமத்தில் இயற்கையாக உள்ள என்ணெய் பசையானது சருமத்தை நன்கு பாதுகாத்து இறுக்கமாக இருக்க உதவுகிறது.
தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும், வறண்ட சருமத்திற்குக் காரணாமாகும். பலவகையான சோப்புகளை பயன்படுத்துவதாலும் சரும வரட்சிக்கு காரணமாகும். எனவே காரமில்லாத மிதமான சோப்பு வகைகள் அல்லது மூலிகைகள் லகலந்த சோப்புகள், கிரீம்களை பயன்படுத்துவது நல்லது.
No comments:
Post a Comment